2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'இல்லாமல் போன இன்பங்கள்' நூல் அறிமுக விழா

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


கோவிலூர் செல்வராஜனின் இல்லாமல் போன இன்பங்கள் நூல் அறிமுக விழா மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்றது.

செங்கதிர் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் க. தங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூல் அறிமுகவுரையை செங்கதிர் ஆசிரியர் த. கோபாலகிருஷ்ணனும் நூல் நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வெலண்டினா பிரான்சிசும் நிகழ்த்தினர்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் க. பாஸ்கரன், மட்டக்களப்பு தமிழ் சங்கத் தலைவர் செ. எதிர்மன்னசிங்கம், கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் த. சிவசுப்பிரமணியம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தவிசாளர் பொன் செல்வநாயகம், கலாநிதி ஏ. செல்வேந்திரன், ஆகியோர் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நூலாசிரியர் கோவிலூர் செல்வராஜனுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X