2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உலகெலாம் நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, இராகுல் நாயுடு எழுதிய சமயம் கடந்த உண்மையை இயம்பும் 'உலகெலாம்' நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

செங்கதிர் இலக்கிய வட்டத் தலைவர் க.தங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றூபி வலன்ரினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.

விசேட விருந்தினராக ஜனாதிபதியின் இணைப்பாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி த.சிவநாதன், மட்டக்களப்பு தமிழ் சங்கப் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்தி, மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன், சிரேஷ்ட நிகழ்சித் தயாரிப்பாளர் எஸ்.மோசஸ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.



 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X