2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருமறைக் கல்வி நூல் வெளியீடு

Gavitha   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மறைப்போதகர் எஸ். அருமைராஜாவின் கத்தோலிக்க திருமறைக் கல்வி நூல் வெளியீட்டுவிழா இன்று திங்கட்கிழமை (27) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
 
மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி ரி.ஏ. யூலியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கலாநிதி ஜோசப் பொன்னையா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
 
இவ்விழாவில், மறைமாவட்ட குரு முதல்வர் எப்.எக்ஸ்.டயஸ், தாண்டவன் வெளிபங்குத் தந்தை சி.வி. அன்னதாஸ், மட்டக்களப்பு மறைக் கோட்ட முதல்வர் ஜே.எஸ். மொறாயஸ், மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை அதிபர் ஏ.எஸ். யோகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இந்நூல் க.பொ.த தரத்தில் பரீட்சையில் தோற்றவிருக்கும்  கத்தோலிக மாணவர்களை இலக்காக கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X