2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

ஐந்து புத்தகங்களின் வெளியீடு

Kogilavani   / 2014 நவம்பர் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மூதூர் முறாசில்

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழுதிய ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா எதிர்வரும்  16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறவுள்ளது.

கலாபூஷணம் மூதூர் முகைதீன் தலைமையில் மூதூர் ஜாபிறா மன்ஸில் மண்டபத்தில்  இடம்பெறவுள்ள இவ்விழாவில் நாயகக் காவியம், மனிதம், ஊர் துறந்த காவியம், எஸ்.எல்.எம்.முகைதீன் கவிதைகள் ,அன்பின் மகனுக்கு ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

இவ்விழாவில் ஐந்து நூல்களினதும் அறிமுகவுரையை எழுத்தாளர் ஏ.எஸ்.உபைதுல்லா (அதிபர்) நிகழ்த்தவுள்ளதுடன் கலாநிதி கே.எம்.எம்.இக்பால், எழுத்தாளரும் கிழக்கு மாகாண சபைச் செயலாளருமான எம்.சி.எம்.ஷெரிப், கவிஞர்களான  எம்.ஏ.பரீது இரத்தின சிங்கம் மற்றும் டி.திலீப் ஆசிரியர் ஆகியோர் நயவுரையை வழங்கவுள்ளனர்.

விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ஐந்து நூல்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

மூதூர் மண்ணின் இலக்கியக முன்னோடி உமர் நெய்னாப் புலவரின் பேரரரே கவிஞர் எம்.எம்.ஏ.அனஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X