2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கிழக்கு மாகாண குறு நாடகப் போட்டி

Kanagaraj   / 2014 நவம்பர் 30 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுயாஜித்


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குறு நாடகப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (30) மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய  மாவட்டங்களைச் சேர்ந்த கழகங்கள் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 4 கழகங்களே பங்குபற்றின.

இப் போட்டிகளில் சிறந்த நாடகம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த நெறியாளர், சிறந்த மேடையமைப்பு, சிறந்த ஒப்பனை எனப் பல்வேறு கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

பிரதேச செயலக ரீதியாக நடத்தப்பட்ட குறு நாடகப் போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்களே இப் போட்டிகளில் பங்குபற்றின.

இப் போட்டிகளுக்கான விருது வழங்கல் டிசெம்பர் மாதத்தில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார இணைப்பாளர் தங்கராஜா மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் 'நெய்தல்', செங்கலடி தேனக கலை மன்றத்தின் 'எதற்கும் ஒரு காலம் வரும்', வவுணதீவு மலைமகள் கலைமன்றத்தின் 'சிவ மகிமை', வாழைச்சேனை அண்ணா கலை மன்றத்தின் 'பெண்களும் மனிதர்கள் என்போம்' ஆகிய நாடகங்கள் இப் போட்டியில் பங்குகொண்டன.

சிறந்த நவீன நாடகங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் நோக்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X