2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாலர் கலை விழா

Sudharshini   / 2014 டிசெம்பர் 14 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.விஜயவாசகன்

சாவகச்சேரி புவேந்தன் பாலர் பராமரிப்பு நிலையத்தின் 20ஆம் ஆண்டு நிறைவையெட்டி, நிலையத்தின் தலைவர் வை.இராசரத்தினம் தலைமையில் கலை விழா நிகழ்வு தென்மராட்சி கலைமன்ற கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (13) இடம்பெற்றது.

பராமரிப்பு நிலையத்தில் கல்வி கற்று 2015ஆம் ஆண்டு, தரம் ஒன்றுற்காக பாடசாலை செல்லவுள்ள 45 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அகில இலங்கை ரீதியாக இலங்கை வங்கி நடத்திய அளவு பிரமாணங்களுக்குள் சித்திரம் வரைதல் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய செல்வன் ம.மதுசன், ஜெ.பவிவர்ணன் ஆகிய இரு மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்;டது.

 இந்நிகழ்வில், தென்மராட்சி பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிவத்திரை சிவநாதன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்படபலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X