2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

'உரத்துப் பேசும் தென்றல்' கவிதை நூல் வெளியீடு

Thipaan   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். ஹனீபா


பாலமுனை முபீத் எழுதிய 'உரத்துப் பேசும் தென்றல்' கவிதை நூல் வெளியீட்டு விழா கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் தலைமையில், பாலமுனை இப்னு சீனா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.

அங்கு மட்டக்களப்பு மவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,

கவிஞர்கள் மானிடத்தில் உயர்ந்தவர்கள். அவர்கள் சகல துறைகளிலும் ஆற்றலுடையவர்கள். எமது பிரதேச எழுத்தாளர்கள் மண்வாசனையுடன் அவர்களுடைய படைப்புக்களை வெளிக்கொணர்வதைக் காணமுடிகிறது. அந்தவகையில் பாலமுனை முபீதின் கவிதைகள் மண்வாசனையோடு தொடர பிரார்த்திக்கின்றேன்.

தற்காலத்தில் கவிஞர்களை வளர்த்துக் கொள்வதற்கு சமூக வலைத்தளங்கள் பெரும் வளமாகக் காணப்படுகின்றது. எனவே கவிஞர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை உதவிப்பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசியத் தலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை, தேசகீர்த்தி எம்.ஐ.எம். றியாஸ், கவிஞர் பாலமுனை பாறூக் உட்பட அதிபர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X