2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கலாபூஷண கலைஞர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2014 டிசெம்பர் 23 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ற.றஜீவன்


கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து வழங்கிய அரச கலாபூஷணம் விருதை பெற்றுக்கொண்ட பருத்தித்துறை கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.  


பிரதேச செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பருத்தித்துறை கலைஞர்களான ஈ.ஆழ்வாப்பிள்ளை (மேடைநாடகம்), பி.வேதநாயகம் (இலக்கியம்), ரி.தவராஜா (கிராமியக் கலை), எம்.ஜெயானந்த ஆச்சாரி (சிற்பக்கலை), வி.கார்த்திகேசு (நாடகம்), ஏ.என்.எஸ்.திருச்செல்வம் (ஊடகம்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் தலைமையுரையாற்றுகையில்,


'ஒரு நாட்டின், ஒரு பிரதேசத்தின் அடையாளங்களை உருவாக்குபவர்கள் கலைஞர்கள்.. நாடு என்பது மண், கல், மரம், கடல் என்று இருக்கும் நிலையில் அதன் பெயரை, பெருமையை, அடையாளங்களை கூறுவது அங்கு வாழும் கலைஞர்கள் மட்டுமே.


கலைஞர்களை அவர்கள் உயிருடன் இருக்கும்போது நாம் கௌரவிக்கத் தவறுகின்றோம். அவர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை கௌரவிக்கும் மனநிலை ஏற்படுத்தப்படவேண்டும்.


எமது பிரதேச செயலக பிரிவில் 6 கலைஞர்கள் கலாபூஷணம் விருது பெற்றமை, எமக்கு பெருமையாகவுள்ளது. இலங்கையில் ஒரு பிரதேச செயலகத்தில் அதிகூடியவர்கள் கலாபூஷணம் விருது பெற்றமை எங்களுடைய பிரதேச செயலகமாக இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்.


இந்த கலை நிகழ்வுக்கு ஆட்களை அழைத்து வருவதற்கு நாங்கள் சிரமப்பட்டோம். அந்தளவுக்கு எங்கள் நிலைமாறியுள்ளது' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X