2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பண்பாட்டுப் பெருவிழா

Sudharshini   / 2014 டிசெம்பர் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களது விபரங்கள் அடங்கிய 'கலைஞர் மஞ்சரி' என்ற நூலும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
யாழ். பல்கலைக்கழக நடன விரிவுரையாளர் நீர்வேலியூர் க.சத்தியப்பிரியாவினுடைய மாணவிகளின் நடன நிகழ்வு, அச்சுவேலி சரஸ்வதி  வித்தியாசாலை மாணவர்களின் வாள் நடனம், யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள், விரிவுரையாளர் சிவை.குகனேசனின் நெறியாள்கையில் வழங்கிய வாத்திய பிருந்தா ஆகிய கலை ஆற்றுகைகளும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், ஆக்க இலக்கியகர்த்தா உடுவை. எஸ்.தில்லை நடராஜா பிரதேச பண்பாட்டுப் பேரவையினரால் கலைக்காவலன் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உஷா சுபலிங்கம், வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், கலாநிதி ஆறு.திருமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X