2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

முத்து விநாயகர் வித்தகம் நூல் வெளியீடு

Sudharshini   / 2015 ஜனவரி 19 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்
,வா.கிருஸ்ணா

பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் பிரதம குரு விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ். காந்தன் குருக்கள் எழுதிய, 'முத்து விநாயகர் வித்தகம்' நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (18) ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

கும்பாபிஷேக மலராக வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் வெளியீட்டுரையை ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனும் நயவுரையை பழுகாமம் மகா வித்தியாலயத்தின் அதிபர் க. பிரபாகரனும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணண், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரன், ஓய்வு பெற்ற நீதிபதி கா.தட்சணாமூர்த்தி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதம குரு மு.கு. சச்சிதானந்த குருக்கள், நூலாசிரியருக்கு வாழ்த்துப் பத்திரம் வழங்கிக் கௌரவித்தார்.
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X