Sudharshini / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் 'கவிதைப்பட்டறையும் கருத்தாடலும்' எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப்பட்டறையின் இறுதிநாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.
முல்லை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மதியரசி ஒழுங்கமைப்பில் இருநாள் நிகழ்வாக நடைபெற்ற இக்கவிப்பட்டறை, முல்லைத்தீபனால் நடத்தப்பட்டது.
மொழியின் தோற்றம் பற்றிய விளக்கத்துடன் ஆரம்பமாகி, கவிதை என்றால் என்ன? கவிதையின் வகைகள், வாசகர்களின் நிலை, முல்லைமாவட்டக் கவிதைகளின் தன்மை மற்றும் சமகாலத்தில் கவிதையின் தேவையும் தாக்கமும் எனும் தலைப்புக்களில் பட்டறை நடாத்தப்பட்டது.
இக்கவிதை பட்டறையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட உயர்தர மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

28 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
48 minute ago
2 hours ago