Thipaan / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய சமூக மேம்பாட்டு மையம் நடாத்தும் கௌரவிப்பு நிகழ்வு, குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (12) காலை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு திருவருள் சங்கம், சமூக மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் தலைவராகத் தொழிற்படும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் க.ஞானரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ளது.
கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் பிரதம அதிதியாகவும், ஸ்ரீராமகிருய் மிசனினி தலைவர் சசுவாமி சதுர்புஜானந்தா ஜீ, 5 வலயக்கல்வி பணிப்பாளர்கள் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரண தர,உயர்தர) பரீட்சைகளில் சாதனை செய்தவர்களும், சமயப்பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள், தமிழ் தினப் போட்டியில் மாகாண தேசிய மட்டங்களில் சிறப்பித்தவர்கள், வைத்தியர்கள், பொறியிலாளர்களுமாக 65க்கும் அதிகமானோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
வருடா வருடம் நடத்தப்படும் இந்தக் கௌரவிப்பு விழாவில் கடந்த தடவை கலாநிதிப்பட்டம் பெற்ற குருக்கள் மட்த்தைச்சேர்ந்தவர்கள் கௌரவிப்ப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
27 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago