Sudharshini / 2015 மே 12 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் கவிஞர் கருணாகரனின் நான்கு நூல்களுக்கான அறிமுக விழாவும் விமர்சன அரங்கும் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை 3.30 மணியளவில் யாழ்.திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
எஸ்.நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 'இப்படி ஒரு காலம்' கட்டுரைத்தொகுதிக்கான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் அன்ரன் அன்பழகன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 'வேட்டைத்தோப்பு' சிறுகதைத் தொகுதிக்கான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் க.தணிகாசலம் வழங்கினார். 'நெருப்பின் உதிரம்' கவிதைத் தொகுதிக்கான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் ச.சித்தாந்தன் வழங்கினார்.
தொடர்ந்து 'ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்' கவிதைத் தொகுதிக்கான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் சி.ரமேஷ் வழங்கினார்.
இந்நிகழ்வில் இறுதியாக கருணாகரனின் படைப்புகள் பற்றிய திறந்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.


18 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
47 minute ago
55 minute ago