Thipaan / 2015 மே 20 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானக் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாசார விழா திங்கட்கிழமை (18) நடைபெற்றது.
சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இவ்விழாவில் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ. சேகுஅலி பிரதம அதிதியாகவும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன் விஷேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
வெலிகந்தை (சிங்கள) மகா வித்தியாலயம், செங்கலடி (தமிழ்) மத்திய கல்லூரி, காத்தான்குடி மீரா பாலிகா தேசியப் பாடசாலை, ஏறாவூர் அல் - முனீரா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவிகளது கலாசார நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
மேலும், மாயாஜாலம் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.
நிகழ்வுகளின் பங்கேற்பாளர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள் சான்றிதழ்கள், பாடசாலைகளுக்கும் அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.


16 minute ago
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
53 minute ago