2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

சங்கமம் வாத்தியக் கலையகத்தின் கலைவிழா

Sudharshini   / 2015 மே 27 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் சு.கோபிதாசின் சங்கமம் வாத்தியக் கலையகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவுக் கலைவிழா யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை ரஞ்சுதமலர் நந்தகுமாரும் ஆசியுரையை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனும் நிகழ்த்தினர்.  

இசைத்துறைக்கான முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கணபதிப்பிள்ளை மதிப்பீட்டுரையாற்றினார்.
இந்நிகழ்வில், சுமார் 25 இளம் வயலின் இசைக் கலைஞர்கள் பங்குகொண்ட வயலின் இசை ஆற்றுகை மேடையேற்றப்பட்டது.

சிறப்பு நிகழ்வாக கொழும்பு கட்புல அரங்கக் கலைகளுக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர் சாஸ்த்திரபதி இசுறு ஹொந்தசிங்கவின் ஹிந்துஸ்தானிய வயலின் இசைக் கச்சேரி இடம்பெற்றது. இதற்கு தென்னிலங்கைக் கலைஞர் பிரசங்க கலாவேதி பாவர நவமின தபேலா இசை வழங்கினார்.

இசைக் கலைஞர்களுக்கு முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாபூஷணம் எஸ்.கணபதிப்பிள்ளை, யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.ஸ்ரீதர்ஷனன் ஆகியோர் சான்றிதழ்களையும் நினைவுப் பரிசிலையும் வழங்கி; கௌரவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .