2025 மே 03, சனிக்கிழமை

உயில் கவிதை நூல் வெளியீடு

Princiya Dixci   / 2015 ஜூன் 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக உதவியாளர் சு.நவநீதகிருஸ்ணன் எழுதிய உயில் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா, யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்றது.

வரவேற்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதம நூலகர் ஸ்ரீஸ்காந்தலட்சுமி அருளானந்தம், நூல் அறிமுகவுரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராசா ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராசா நூலை வெளியிட்டு வைக்க, யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் முன்னாள் நூலகர் எஸ்.தனபாலசிங்கம் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்துறை தலைவரும் ஒய்வுநிலை பேராசிரியருமான எஸ்.சிவலிங்கராசா நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X