2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

நாட்டிய நாடகங்கள் அரங்கேற்றம்

Kogilavani   / 2015 ஜூன் 02 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நாடக கலைஞர் பாலேந்திராவின் நெறியாள்கையில் உருவான இரு நாட்டிய நாடகங்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையத்தின் இராஜதுரை அரங்கில்; சனிக்கிழமை மேடையேற்றப்பட்டன.

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தின் மாணவர்கள் இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்றனர்.

நாடக கலைஞர் பாலேந்திரா, பேராசிரியர் மௌனகுரு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கைக்கு வருகை தந்து நாடக பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

இதன்போது பாலேந்திராவினால் பயிற்சியளிக்கப்பட்ட காண்டவ தகனம், நெட்டை மரங்கள் ஆகிய நாடங்கள் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .