2025 மே 03, சனிக்கிழமை

மணிபுரி நாட்டிய நிகழ்வு

Kogilavani   / 2015 ஜூன் 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இந்திய உதவி தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியா மணிபுரி லோகேந்திரஜித் சிங் குழுவினர்களின் மணிபுரி நாட்டிய நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இரத்தினபுரி, சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கலாசாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சப்ரகமுவ மாகாண சபையும் கண்டி இந்திய உதவி தூதரகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதல்கட்டமாக இந்நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கண்டி இந்திய உதவி தூதுவர் ராதா வெங்கட்ராமன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, மாகாண சபையின் பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டிய குழுவினர்களுக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா,   மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, ஆகியோர் பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X