2025 மே 03, சனிக்கிழமை

மலரே மௌனமா திரைப்படம் காட்சிப்படுத்தும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஜூன் 02 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மலரே மௌனமா' திரைப்படத்தினை ஊடகவியளாளர்களுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்வும் தெளிவூட்டும் நிகழ்வும் நேற்று (01) அக்கரைப்பற்று ரிஎப்சி ஹோட்டேலில் இடம்பெற்றது.

லக்சிறி ஆர்ட் பிலிம்ஸாரின் வெளியீட்டில்;  எம்;.கிஷோர் வழங்கும் இத்திரைப்படமானது 32இலட்சம் ரூபாய் செலவில் 45 கலைஞர்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் எம்.எஸ்.றசூல்டீன் தெரிவித்தார்.

கிழக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மற்றுமொரு மைல்கல்லாக இத்திரைப்படம் அமைந்துள்ளதென தயாரிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 18 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட 'அன்புள்ள அவள்' திரைப்படத்தின் பின் இரசிகர்களின் இரசனைக்கேற்ப 2 மணித்தியால திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

கதை, திரைக்கதை வசனம், பாடல்கள், இசை போன்ற அனைத்து துறைகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்படம் நடிகர்களின் நடிப்பிலும் மிளிர்ந்துள்ளதென அவர் தெரிவித்தார்.

கலைத்துறையில்  எவ்வகையிலும் தென்னிந்திய கலைஞர்களுடன் ஒப்பிடுகையில் நம்மவர்கள் சளித்தவர்கள் அல்ல என்பதை இத்திரைப்படம் நிரூபித்துள்ளது.

மேலும், இத்திரைப்படமானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டுவருவதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X