2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

மண்கமழும் மங்கல விழா

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் நடாத்தும் மாபெரும் மண்கமழும் மங்கல விழா அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (07) நிறைவு பெறவுள்ளது.

இவ்விழாவின் இன்றய ஆரம்ப நாளில் 'உறவுகளுடன் உறவாடுவோம்'  எனும் தலைப்பில் கவி, காவியம், தோத்திரம், மந்திரம், வசந்தன், உழவர்பாடல், கூத்து மகப்பேற்று வைத்தியம், மீனவர் பாடல், ஊஞ்சல் பாடல் பழமொழியும் மக்கள் வாழ்க்கையும், போன்ற பாரம்பரியங்கள் பற்றி எதிர்கால சந்ததிக்கு எடுத்தியம்பும் அனுபவபகிர்வும் இடம்பெறுகின்றது.

இரண்டாம் நாhகிய ஞாயிற்றுக்கிழமை(07) மண்கமழும் கலையமுதம் கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் தலைவர் த.மேகராசா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன் போது பாரம்பரிய ஊர்வலம், முகவரி எனும் சஞ்சிகை வெளியீடு, கலைஞரகள்; கௌரவிப்பு, சிறந்த கலைக்கழக விருது, மண்கமழும் கலை நிகழ்வு, புலிக்கூத்து ஆற்றுகை, வைகுந்தம் எனும், வடமோடிக் கூத்து என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .