Kogilavani / 2015 ஜூன் 11 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்
யாழ்ப்பாணம், இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஓய்வுநிலைப் பிரதி அதிபர் பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு, எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளர் அமிர்தகழியூர் டாக்டர் ஓ.கே.குணநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (10) நல்லூரில் இடம்பெற்றது.
ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி ஆறு.திருமுருகன், தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் சு.ஜெபநேசன், அருட்கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை, மூத்த எழுத்தாளர் தமிழ்மணி கலாநிதி அகளங்கன் ஆகியோர் நிகழ்வின் நாயகர்களை வாழ்த்தியும் நயந்தும் உரையாற்றினர்.
யாழ். இலக்கிய வட்டத்தின் நினைவுப் பரிசை எழுத்தாளர் ஓ.கே.குணநாதனுக்குக் கலாநிதி ஆறு.திருமுருகனும் பண்டிதர் செ.திருநாவுக்கரசுவுக்கு பேராசிரியர் அ.சண்முகதாசும் வழங்கினர்.
தென்மராட்சி இலக்கிய அணியின் சார்பில் ஆசிரியர் ச.மார்க்கண்டு, அ.வாசுதேவா ஆகியோர் வாழ்த்துப்பா வழங்கியும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் சார்பில் அதிபர் வீ.கருணலிங்கம், பிரதி அதிபர் ச.லலீசன் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் மதிப்பளித்தனர்.
நிகழ்வில் அருட்பணியாளர்கள், எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வின் நாயகர்களுக்கு வாழ்த்துக் கூறினர்.
பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு மருத்துவப் பராமரிப்பில் வீட்டில் தங்கியிருக்கும் நிலையில் நீண்ட இடைவெளியின் பின்னர் பங்குபற்றிய நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago