2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

'சரித்திரம் என்னை நிரபராதியாக்கும்' நூல் வெளியீடு

Princiya Dixci   / 2015 ஜூன் 11 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொழிபெயர்ப்பாளர் காயத்திரி கணநாதபிள்ளையினால் மொழிபெயர்க்கப்பட்ட 'சரித்திரம் என்னை நிரபராதியாக்கும்' நூலின் வெளியீடு, எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெறவுள்ளது.

ஃபிடெல் காஸ்ரோவின் “History will absolve me” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே 'சரித்திரம் என்னை நிரபராதியாக்கும்' நூலாகும்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, தேசிய கல்வி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக கலந்துகொள்ளவுள்ளார். கௌரவ அதிதிகளாக, கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் ஃபிளோரன்டினோ பெடஸ்டா, பத்திரிகை எழுத்தாளர் ஜயதிலக டீ சில்வா மற்றும் ஸ்ரீ லங்கா - கியூபா நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் எஸ்.நாகேந்திரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் வரலாற்று மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலரையும் கலந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கியூபா - ஸ்ரீ லங்கா நட்புறவுச் சங்கம் மற்றும் பிரெண்ட்ஷிப் புத்தக நிலையம் ஆகிய இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .