Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஐந்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இன்று சனிக்கிழமை (13) கோலாகலமாக ஆரம்பமானது.
கண்ணகி இலக்கிய விழாவினை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வாக மாபெரும் பண்பாட்டுப்பவனி நடைபெற்றது.
ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு மற்றும் சித்தாண்டி முருகன் ஆலயத்திலிருந்து வந்த பண்பாட்டுப்பவனிகள், வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றிலில் ஒன்றிணைந்து வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்துக்கு ஊர்வலமாக சென்றது.
ஊர்வலம் பாடசாலையியை வந்தடைந்ததும் பாடசாலை முன்றிலில் வசந்தன் கூத்து நடைபெற்றதுடன்
அதனைத்தொடர்ந்து, இன்றைய தின விழாக்குழு தலைவரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.எல்.விக்கிரம ஆராச்சி,கண்ணகி இலக்கிய கூடல் காப்பாளர் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், கலை இலக்கியத்துடன் தொடர்புடைய பொருட்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
10 May 2025