2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

ஓர் இனத்தின் இருப்பை உறுதி செய்வது சமகால இலக்கியங்கள்

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

ஓர் இனத்தின் சுவடுகலாகவும் அவ்வினத்தின் கலை, கலாசார மற்றும் பண்பாடுகளையும் விழுமியங்களை முன்னிறுத்தி தமது இனத்தின் இருப்பை உறுதி செய்வது சமகாலத்தில் தோற்றம் பெறும் இலக்கியங்களே என திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆர்.இரத்தினகுமார் தலைமையில் திருக்கோவில் குமர வித்தியாலத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற திருக்கோவில் யோகா யோகேந்திரனின் இலக்கிய நூல் வெளியிட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

தமிழர்களின் வரலாறுகள் என்பது மிகவும் தொன்மையாது. இதற்கு காரணம் காலம் காலமாக எமது சமூகத்தின் இருப்பை இன்றுவரை உறுதி செய்திருப்பது இலக்கியங்கள் தான். அந்தவகையில் எமது வரலாறுகள் இவ்வாறு தோற்றம் பெறுகின்ற இலக்கிய நூல்களை வைத்ததான் எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாறு மற்றும் இருப்புக்கள் உறுதி செய்யப்பட போகின்றது.

ஒரு காலம் மௌன இலக்கிய காலமாக இருந்து விட்டு பின் வரலாறுகள் தேடி கூறுவது என்பது பொய்யான புனைக்கதை வரலாறுகளாகத்தான் இருக்கும். வரலாறு என்பது உண்மை கலந்த பொய் அல்லது பொய் கலந்த உண்மை என்பது தான் உண்மை. எனவே, காலம் காலமாக இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்ற போது அது ஓர் இனத்தின் இருப்பை வலுவாக உறுதி செய்யும்.

எனவே, இலக்கியவாதிகள் தொடர்ந்து இலக்கியங்களை வெளியிட முயற்சிகள் மேற்கொள்வதுடன் எமது சமூகத்தின் இருப்தை உறுதி செய்வதற்கு பாடுபட வேண்டும். அந்தவகையில் அண்மைக்காலமாக திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ந்து இலக்கியங்கள் வெளிவருகின்றமை திருக்கோவில் பிரதேசத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை அளிப்பதாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .