2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

பொன்விழா மலர் வெளியீடு

Sudharshini   / 2015 ஜூன் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையின் சுன்னாகம் பொது நூலகத்தின் பொன்விழா நிகழ்வும் மலர் வெளியீடும் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தலைமையில் சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் திங்கட்கிழமை (22) முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஓய்வுநிலை செயலாளர் திருமதி சரஸ்வதி சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுன்னாகம் நூலகத்தின் வரலாற்றை தாங்கிய பொன்விழா மலர் வெளியீடும் இடம்பெற்றது. வெளியீட்டுரையை ஓய்வுநிலை சுன்னாகம் பொது நூலக நூலகர் க.சௌந்தரராஜா ஐயர் நிகழ்த்தினார்.

நூலினை வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெளியிட்டு வைக்க, சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் சி.குமாரவேல் பெற்றுக்கொண்டார். நூலகத்தில் பணியாற்றியவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .