2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

கோட்டையூரானின் கூத்துக்கள் ஏழு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 26 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாற்றை சேர்ந்த கலாநிதி க.மதிபாஸ்கரன் எழுதிய கோட்டையூரானின் கூத்துக்கள் ஏழு எனும் நூல் வெளியீட்டு விழா இன்று  வெள்ளிக்கிழமை (26) மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் வண்ணக்கர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு நீர்ப்பாசனம் பொறியியலாளர் எந்திரி எஸ்.மோகனராஜா, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் உட்பட இலக்கியவாதிகள், கவிஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.  

நூலின் நயவுரையை எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜாவும் கே.ரவியும் வழங்கினர். நூலின் முதல் பிரதியை  நூலாசிரியரான கலாநிதி  க.மதிபாஸ்கரனிடமிருந்து எருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .