2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கவிதைப் பயிற்சிப் பட்டறை

Sudharshini   / 2015 ஜூலை 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கலாசார கிளையினரால் பிரதேச மாணவர்களுக்கான கவிதைப் பயிற்சிப் பட்டறை பிரதேச செயலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (11) நடத்தப்பட்டது.

7 தலைப்புக்களில் நடத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில், வளவாளர்களாக ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் என்.செல்வநாயகம், பிரதேச செயலர் சி.குணபாலன்,, மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சி.மோகனராசா, செல்லமுத்து வெளியீட்டக இயக்குனர் யோ.புரட்சி, கவிஞர் முல்லைத்தீபன், காவியப் பிரதீபா, வன்னியூர் செந்தூரன், கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு வலயக் கல்வி தமிழ்ப்பாட பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.பீதாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் என்.பிரதாபன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ்.மதியரசி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X