2025 நவம்பர் 05, புதன்கிழமை

புத்தளம் தமிழர் பேரவையின் முதலாவது அமர்வு

Thipaan   / 2015 ஜூலை 12 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தமிழர் பேரவையின் முதலாவது அமர்வு, புத்தளம் அனுராதபுர வீதியில் அமைந்துள்ள  இந்து மஹா சபை மண்டபத்தில் அதன் தலைவர் வீராசாமி சண்முகவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை (10) மாலை நடைபெற்றது.

18 அங்கத்தவர்களை கொண்ட இந்த புத்தளம் தமிழர் பேரவையானது இம்மாதம் முதலாம் திகதி புத்தளம் நகரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகரின் இந்து ஆலய நிர்வாக சபையின் அங்கத்தவர்கள், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள், சமூக தொண்டர்கள் மற்றும் இந்து மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த தமிழர் பேரவை செயற்பட்டு வருகிறது.

தமிழருக்கான தலைமை பீடத்தினை உருவாக்குதல், ஆலயங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைத்தல், தமிழர்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளை தீர்த்து வைத்தல், ஒற்றுமையை வளர்த்தெடுத்தல், எதிர்காலத்தில் பலம் மிக்க அரசியல் அமைப்பாக செயல்படல், சிதறிக்கிடக்கும் தமிழ் வாக்காளர்களை ஒன்று சேர்த்தல், தமிழர்களின் சமூக நலன், சமூக வளம், சமூக அபிவிருத்தி தொடர்பாக தீவிர கவனம் செலுத்துதல் போன்றன இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.

இப்பேரவையின் ஆலோசகராக, புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் கடமையாற்றி வருகிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X