2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

ரமழான் கவிப் பொழிவும் இலக்கிய ஒன்று கூடலும்

Thipaan   / 2015 ஜூலை 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொது வெளியினர் (அகராயுதம்) ஏற்பாட்டில் இடம்பெற்ற ரமழான் கவிப் பொழிவும் இலக்கிய ஒன்று கூடலும் மாலை நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் பாடசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.

இந்நிகழ்வு, அம்பாறை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் கவிஞர் தம்பிலெவ்வை இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர்களான கலாபூஷணம் கவிஞர் மருதூர் ஏ.மஜீத், கலாபூஷணம் ஆசுகவி அன்புதீன், பாலமுனை பாறூக், கவிஞர் மிஸ்கீன் ஹாஜி, கவிஞர் சட்டத்தரணி எஸ்.முத்து மீரான், கவிஞர்களான எழுகவி ஜெலீல், கிராமத்து கலீபா உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அகராயுதம் அறிமுகம், ரமழான் சிந்தனை, சிறப்பு கவிதைப் பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X