2025 மே 02, வெள்ளிக்கிழமை

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் கலாசார விழா

Sudharshini   / 2015 ஜூலை 20 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் மாதாந்த கலாசார விழா சனிக்கிழமை (18) மன்றக் கலாமண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடபிராந்திய சத்தியசாயி சேவா நிலையத்தினர் வழங்கிய பஜனையும் கவிதா வாமதேவனின் மாணவர்கள் வழங்கிய வீணை இசையும் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் துறை விரிவுரையாளர் சு.கபிலனின் இசைக் கச்சேரி இடம்பெற்றது. இதற்கு அணிசேர் கலைஞர்களாக வயலின் - அ.ஜெயராமன்,  மிருதங்கம் - சி.செந்தூரன்,  கடம் - கு.ரவிசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் நிறைவு நிகழ்வாக 'மனித வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பது எது?' என்ற பொருளில் சுழலும் சொற்போர் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X