Thipaan / 2015 ஜூலை 26 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
அரசையூர் பகியின் 'முதல் மழை' கவிதை நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்; சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கவிஞர் மேரா தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதிகளாக மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன்,மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நூலின் வெளியீட்டினை பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமும் நிதி உதவியினை உலக நண்பர்கள் அமைப்பும் வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் அதிதிகளினால் நூல் வெளியீடு செய்யப்பட்டதுடன் நூல் நயவுரையினை கவிஞர் த.சேரலாதன் நிகழ்த்தினார்.
இதன்போது நூலாசிரியர் பகி மற்றும் நூல் வெளியீட்டுக்கு உதவிகளை வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர்.


16 minute ago
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
53 minute ago