Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 26 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா, எஸ்.குகன்
கோப்பாய் ஆசிரிய கலாசாலை முத்தமிழ் மன்றத்தால் உருவாக்கப்பட்ட 'வற்றுப்பெருக்கு'; குறும்படம் வியாழக்கிழமை (23) மாலை கலாசாலை ரதிலக்ஷி மண்டபத்தில் வெளியீ செய்யப்பட்டது.
அதிபர் வீ.கருணைலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் கலந்துகொண்டு குறும்படத்தை வெளியிட்டு வைத்தார்.
இதன் முதற்பிரதியை சிரேஸ்ட விரிவுரையாளர் வ.சி.குணசீலன் பெற்றுக்கொண்டார்.
படத்துக்கான வெளியீட்டுரையை கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் ஆற்றினார். திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோண்சன் ராஜ்குமார் குறும்படம் பற்றிய விமர்சன உரையை நிகழ்த்தினார்;.
கல்வியினால் ஏற்படும் உயர்வைச் சித்தரிக்கும் இக்குறும்படத்தை ஆசிரியர் கு.உதயபாஸ்கரன் தயாரித்துள்ளார். கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு மீனவச் சூழலை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
4 hours ago