Sudharshini / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் 140ஆவது ஆண்டு நிறைவையொட்டி 'தாவடி இந்து' நூல் வெளியீட்டு விழா, அதிபர் நா.தனபாசிங்கம் தலைமையில் சனிக்கிழமை (01) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் நூலை வெளியிட்டு வைக்க, பழைய மாணவனும் வைத்திய கலாநிதியுமான பொ.ஆறுமுகராசா பெற்றுக்கொண்டார்.
நூலின் அறிமுக உரையை யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் பீட பேராசிரியர் க.தேவராசாவும் மதிப்பீட்டுரையை இணுவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தி.சசீதரனும் நிகழ்த்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .