2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

30 மணித்தியாலங்களில் 30 குறும்படங்கள்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


இந்தியாவின் ஏ.வி.ஆர் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இயக்குநர் சு.வரதகுமார் இயக்கவுள்ள 30  30 குறும்படங்கள் என்ற சாதனை முயற்சி வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா கருமன்காடு காளி கோவிலில் பிரார்த்தனைகளுடன் ஆரம்பித்த சாதனை முயற்சி வவுனியாவின் பல பாகங்களிலும் படமாக்கப்படுகின்றது.

குறும்பட தயாரிப்பில் முன்னணி வகித்துவரும் வவுனியா மாவட்டத்தில், சாதனை முயற்சிகளை முன்னெடுக்கும் முகமாகவே இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக குறும்படங்களின் இயக்குநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம், தமிழருவி த.சிவகுமாரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், கவிஞர் மாணிக்கம் ஜெகன் உட்பட பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .