Sudharshini / 2016 மார்ச் 29 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.
'சுள்ளென்ற சூரியநேர்மை' எனும் கவிதை நூலும் 'கூடி விளையாடுவோம்' எனும் சிறுவர் நாடக நூலும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டன.
கலாபூசணம் க.தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் பிரதம அதிதியாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதம சிவ ஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் ஆன்மீக அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மேலும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சி.தட்சணாமூர்த்தி, போரதீவுப்பற்று பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வே.குணராஜசேகரம், மேலதிக மாவட்ட பதிவாளர் அ.பேரின்பநாயகம், அதிபர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
24 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago