2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

இலக்கிய பெருவிழா

Sudharshini   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கு மாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில்,  வடக்கு மாகாண இலக்கிய பெருவிழா நேற்று (23) கிளிநொச்சியில் ஆரம்பமானது.

முதல் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாளாக இன்று (24) நடைபெறவுள்ள நிகழ்வுகளில், வடக்கு மாகாண கலைஞர்கள், பாடசாலை மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், 'கௌரவ முதலமைச்சர் விருது', சிறந்த நூலிற்கான பரிசில் வழங்கல் நிகழ்வு, நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .