2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

குர்ஆனிய சிந்தனை எனும் விளக்க உரை நூலின் இரண்டாவது வெளியீடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அக்குறனை குர்ஆன் திறந்த பல்கலைக்கழக பணிப்பாளர் எம்.ஏ.எம்.மன்சூரின்  குர்ஆனிய சிந்தனை எனும் விளக்க உரை நூலின் இரண்டாவது வெளியீடு காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை (16) நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (13) இரவு காத்தான்குடியில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் முக்கியஸ்தர் எஸ்.எம்.சாதுலி,

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எழுதப்பட்ட அல்குர் ஆன் விளக்கவுரை நூலினது இரண்டாவது வெளியீடே காத்தான்குடியில் தற்போது நடைபெறவுள்ளது.

மேற்படி நூலாசிரியரான அஷ்-ஷெஹ் எம்.ஏ.எம்.மன்சூர் (நளீமி) நாடறிந்த ஒரு மார்க்க அறிஞரும் குர்ஆனை ஆய்வு செய்துவருபவருமாவார்.

அவரின் இந்தப்பணிக்கு நமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்

இந்த நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை(16) மாலை 7.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

றாபிதத்துன் நளீமிய்யீன் அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே.அப்துர் ராஸிக் (நளீமி) தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி அப்துல் காதர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவூர் ஏ மஜீட் , விசேட அதிதியாக உஸ்தாத்  எம்.ஏ.எம்.மன்சூர் (நளீமி) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நூல் அறிமுக உரையை கவிமணி எம்.எச்.எம்.புஹாரி பலாஹியும் நூல் ஆய்வுரையினை தென் கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லமிய கற்கைகள் நெறி பீடாதிபதி எஸ்.எம்.எம்.மஸாஹிரும்  நிகழ்த்துவர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .