2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கலை இலக்கிய பெருவிழா

Sudharshini   / 2015 நவம்பர் 28 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிண்ணியா பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய '2015 ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய பெருவிழா', கிண்ணியா பிரதேச உதவிச் செயலாளர் பீ.அஜிதா தலைமையில் கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று (28) நடைபெற்றது.

இப்பெருவிழாவில் கிண்ணியா பிரதேசத்துக்கு உரித்தான பல்வேறு படைப்புக்கள் அரங்கேற்றப்பட்டன. இதில் சீனடி மற்றும் வால்வீச்சு போன்ற விளையாட்டுகள் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றன.

இவ்விழாவில், 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  சான்றிதழ்கள்  வழங்கி வைக்கப்;பட்டது.

மேலும், பிரதேசத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்த ஏ.ஸி.எம்.இப்ராஹீம் (இலக்கியம்), ஏ.எம்.உதுமான்சா ராவுத்தர் (இலக்கியம்), ஏ.கே.முஜாரத்;(இலக்கியம்), எம்.எச்.எம்.இஸ்மாயில் (ஓவியம்), ஏ.ஸி.எஸ்.ஜே.பதூத் (ஓவியம்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூகர்கான்,கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச்.சமீம், கிண்ணியா பிரதேச பாடசாலை அதிபர்கள்  உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .