2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கலைகளை அழியாமல் பாதுகாப்பது எமது கடமை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கலைகளை அழியாமல் பாதுகாப்பது எம் அனைவரதும்  மிக பெரிய கடமையாகும் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

ஏறாவூர் கலாசாரக் குழுவின் கலை விழா தொடர்பில் விளக்கமளிக்கும்  கூட்டம், ஞாயிற்றுக்கிழமை எறாவூர் நகர பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மத் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கலாசார துறைசார்ந்த கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் பாரம்பரிய கலைகளுக்கு உயிரூட்டி அவைகளை மங்கி மறையாமல் காக்க முடியும்.

அதனடிபப்டையில் எதிர்வரும் 30 திகதி பௌர்ணமி இரவுடன் இணைந்ததாக வர்ண கலாச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலைஞர்களும் இளம் கலையார்வமிக்கவர்களும் கௌரவிக்கப்படுவதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெறும்' என்றார்.

இக்கூட்டத்தில் ஏறாவூர் பிரதேச செயலக கலாசாரக் குழுவின் அங்கத்தவர்கள் சகலரும் கலந்து கொண்டதுடன் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான கலாசார விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .