2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கலாசார விழா

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மண்முனை மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய கலாசார மற்றும்  இலக்கிய விழா பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில்  நடைபெற்ற இவ்விழா கிராமிய பாரம்பரிய கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்திருந்தது.

இதன்போது வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, கரகம், வசந்தன், கவிதை மற்றும் கன்னங்குடா பாடசாலை மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

கலைஞர்கள் கௌரவிப்பு நடைபெற்றதுடன்,  ஆக்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலை நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்கள ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்செல்வன், வவுணதீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .