2024 மே 17, வெள்ளிக்கிழமை

கலாசார விழா

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகமும்; கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்தி வரும் 2015 ஆம் ஆண்டுக்கான கலாசார விழாவும் 'பூந்துணர்  நறுவம்' ஐந்தாவது இதழ் வெளியீட்டு விழாவும் வியாழக்கிழமை (03) பரமன்கிராய் பாடசாலையின் அண்ணாவியர் தம்பையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றன,

பூநகரி பிரதேச செயலர் சி.ச.கிருஸ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு, பூந்துணர் நறுவம் நூலை வெளியிட்டு வைத்தார்.
போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும், முதுபெரும் கலைஞர்களான தம்பையா சிவசம்பு, திருமதி சுந்தரமூர்த்தி சரஸ்வதி, கே.ஜீ.கண்ணதாசன் ஆகியோருக்கு கலைநகரி விருதும் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் சி.சத்தியசீலன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .