2024 மே 16, வியாழக்கிழமை

கலாசார விழா

Sudharshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலாசார விழா, பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாவாற்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலை, கஜீஜா கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனமும் இஸ்லாமிய கலாசார நிகழ்வு இடம்பெற்றது. நாட்டார் பாடல்களை ஜே - 76 சிறுவர் கழகமும், ஜே - 84 சிறுவர் கழகமும் வழங்கியதுடன் யாழ்ப்பாணம் கலாசார பேரவையின் 'விடியலின் தாகம்' என்ற நாட்டார் கூத்தும் மேடையேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், கு.சரவணபவனாந்தன், ச.முருகையா, தொ.அந்தோனிப்பிள்ளை, சு.நாகலிங்கம், செ.அழகராஜா, பி.யூல்ஸ்கொலின், சூ.அமிர்தநாதா, ம.செபஸ்தியாம்பிள்ளை, அ.சந்தியாப்பிள்ளை உட்பட  9 பேருக்கு யாழ்.ரத்னா விருதும், அ.செலஸ்ரீன், திருமதி ர.மேரியம்மா, திருமதி அஜித் சித்தி நஸ்மியா, திருமதி கபூர் ஜன்ஸி ஆகியோருக்கு இளங்கலைஞர்களுக்கான விருதும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள  உதவிப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம், பிரமச்சாரிய ஜாக்ரத சைத்ன்யா வதிவிட ஆச்சாரியர் சின்மயாமிஷன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .