2024 மே 16, வியாழக்கிழமை

கலைஞர்களை நல்ல மனிதர்களாக கொண்டாடுங்கள்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கலைஞர்கள் எனும் வகையில் பொன்னாடை அணிவித்து கொண்டாடுவதைவிட அவர்களை நல்ல மனிதர்களாக கொண்டாடுங்கள் என ஈழத்து நாடக தலைமுறையொன்றின் தாய் என வர்ணிக்கப்படுகின்ற நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் தெரிவித்தார்.

ஸ்ரீலேக்கபேரின்பகுமாரின் 'கிணற்றங்கரை' (நாடகங்கள்), 'மயில் இறகு' (சிறுவர்கதை) ஆகிய இருநூல்களின் வெளியீட்டுவிழா, சட்டத்தரணி சோ.தேவராஜா தலைமையில் நேற்று சனிக்கிழமை (20) தேசிய கலை இலக்கிய பேரவையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடும்போது,

நாம் எழுதுகின்றவை பலவற்றை புத்தகங்களாக்க வேண்டும். இல்லையேல் அவை பலவும் தொலைந்துவிடும். என்னுடைய பல தொலைந்துவிட்டன. படைப்புக்களைக் கொண்டுவருகின்ற போது நல்லது, கெட்டது என்பது வேறு. ஆனால், பதிவுகள் வரவேண்டும். விமர்சிக்கப்படுவதற்காக பயப்படத்தேவையில்லை. விமர்சனத்துக்கு பயப்பட்டால் நாடகம் எழுத முடியாது.

மற்றவர்கள் குறிப்பிடுகின்ற கருத்துக்களை கேளுங்கள். ஆனால் உங்களது சுயத்தை இழக்காதீர்கள் எமக்காக எழுதுகின்றோhம். நாம் மனிதர்களாவதற்காக முயற்சியில் ஈடுபடுகின்றோhம். நாங்கள் எவ்வாறு ஒழுங்காக இருக்கவேண்டும் என நினைக்க வேண்டும்.

எழுதுகின்றவன் ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கு நியாயம் உண்டு. வாழ்கையில் இருந்து தான் பாத்திரங்கள் பிறக்கின்றன. புனைவை விட உண்மை நம்ப முடியாததாக இருக்கும். நாடகம் முடிந்தாலும் கதை தொடரும் இதுதான் வாழ்கை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .