Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பாலியல் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பாக 'வை பியர்' இளைஞர் கல்வியூட்டல் சமவயதுக் கல்வியாளர்கள் நிறுவனத்தினால், தயாரிக்கப்பட்ட சைகைமொழி சொற்களஞ்சியம் இலங்கையில் முதன்முறையாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
அங்கவீனர்களுக்கான சர்வதேச தின தேசிய வைபவம் கண்டி பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விலேயே ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் சமூக வலுவூட்டல் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட அங்கவீனர்களுக்கான பாலியல் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பான சைகைமொழி சொற்களஞ்சியம் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவல, மத்திய மாகாண சமூக நலனோம்புகை, நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவை அமைச்சர் பந்துல எஸ்.பி.யாலேகம, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பகுப்பாய்வாளர் நிஸாந்த வர்ணசூரிய, சமவயதுக் கல்வியாளர்கள் அமைப்பின் மாவட்ட பயிற்றுவிப்பாளர்களான எஸ்.கிருஷாந்தி, முஹம்மத் அன்பாஸ் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் பொதுமக்களும் மாற்றுத்திறனாளிகளும் கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.

14 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
51 minute ago