2024 மே 17, வெள்ளிக்கிழமை

சின்னஞ்சிறார்களின் வண்ணக்கலைக்கோலம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 20 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் காணப்படும் பாரம்பரிய கலைகளை சிறுவர்கள் மூலமாக வெளிக்கொணரும் வகையிலான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

உலக தரிசன சிறுவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வேள்விஷனின் அனுசரணையுடன் 'சின்னஞ்சிறார்களின் வண்ணக்கலைக்கோலம்' என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 25 முன்பள்ளி மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றன.

உலக தரிசன சிறுவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் இ.குகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக வேள்விஷனின் பட்டிப்பளை பிரதேச முகாமையாளர் இ.மைக்கல், பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.சண்முகநாதன், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கே.வரதராஜன், வேள்ட்விஷனின் திட்ட இணைப்பாளர் ஆர்.அமுதராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .