Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், முதுபெரும் எழுத்தாளர் அமரர் வ.அ.இராசரெத்தினத்தின் 90ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு சிறுகதைப் போட்டியொன்றை நடத்தவுள்ளது.
அகில இலங்கை ரீதியில் நடைபெறவுள்ள, இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே பத்தாயிரம், ஏழாயிரம், மூவாயிரம் ரூபாய் பணப் பரிசில்களோடு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அத்தோடு மேலும் ஐந்து சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், பிரதேச மண்வாசனையை பிரதிபலிக்கும் வகையில் சிறுகதைகளை அமைத்து, ஆறு பக்கங்களுக்கு (ஏ4) மேற்படாது கணினியில் அச்சிட்டு அனுப்புதல் வேண்டும்.
சிறுகதையோடு கதையின் பெயர், எழுதியவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டு, அமரர் வ.அ.இராசரெத்தினம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி, மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், நொக்ஸ் வீதி மூதூர் -5 என்னும் முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்பு அனுப்புதல் வேண்டும்.
போட்டி தொடர்பிலான மேலதிக விபரத்தை அறிந்து கொள்ள விரும்வோர் மூதூர் முகைதீன்: 077-4203500, ஏ.எஸ்.உபைத்துல்லா: 077-8051888 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்புகொள்ளுமாறு, கலை இலக்கிய ஒன்றியம் கேட்டுள்ளது.
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025