2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

சத்தியமூர்த்தி நினைவுகளுடன் பேசுதல்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

எழுகலை இலக்கியப் பேரவையின் ஏற்ப்பாட்டில் 'ஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தி நினைவுகளுடன் பேசுதல்' நிகழ்வு நாளை சனிக்கிழமை, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எழுகலை இலக்கியப்பேரவையின் காப்பாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தொடக்க உரையை எழுகலை இலக்கியப் பேரவையின் செயலாளர் ந.மயூரரூபன், நினைவுரைகளை வலம்புரி பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆகியோரும் அனுபவ உரைகளை ஊடகவியலாளர் இளங்கீரன், எழுகலை இலக்கியப்பேரவையின் தலைவர் கை.சரவணன்  ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.

நன்றியுரையை எழுகலை இலக்கியப்பேரவையின் பொருளாளர் சி.நிஷாகரன் வழங்குவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .