2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச திரைப்பட விழா இறுதிநிகழ்வு

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.சர்வதேச திரைப்பட விழா இறுதிநாள் நிகழ்வு திங்கட்கிழமை (21) மாலை 6 மணிக்கு, காகில்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.

கடந்த 15ஆம் திகதி முதல் ஆரம்பமான சர்வதேச திரைப்பட விழாவில், காகில்ஸ் சதுக்க திரையரங்கு, யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு, பொதுநூலக கேட்போர் கூடம் ஆகியவற்றில் இந்த திரைப்படங்கள் இலவசமாக

காட்சிப்படுத்தப்பட்டன.
காட்சிப்படுத்தலின் போது, பொதுமக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் திரைப்பட வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன்,  அவர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்த்தனாஸ் யோகராசாவுக்கு வழங்கப்பட்டது. பார்வையாளர்களால் 'த பாக்' என்ற படம்  தெரிவு செய்யப்பட்டது. சிறந்த அரங்கேற்ற திரைப்படமாக 'த ஸ்டேஜ் ஒப் பமிலியர்' திரைப்படம் நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 12 அரங்கேற்ற திரைப்படங்களும் 23 குறும்படங்களும் திரையிடப்பட்டன. இலங்கை, இந்தியா, கனடா, மலேசியா, பிரித்தானியா, அவுஸ்திரோலியா ஆகிய இடங்களில் இவை படமாக்கப்பட்டிருந்தன.

இறுதிநாள் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், சர்வதேச திரைப்பட விழாத்தலைவர் பாக்கியநாதன் அகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .