Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
சமயங்கள் மத்தியில் ஒருமைப்பாட்டினையும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் வகையிலான தீபாவளி சிறப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு,நாவற்குடா இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகட் அனுசரணையுடன் மாவட்ட பல்சமய ஒன்றியம் நடத்திய இந்த நிகழ்வில்,பிரதம அதிதியாக கரித்தாஸ் எகட் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜீரோன் டி லிமா,கௌரவ அதிதிகளாக இராம கிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகராஜ்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சர்வமத அமைப்பின் பிரதிநிதியுமான எம்.பி.எம்.பிர்தவுஸ் நளிமி,அருட்பணி ஜோசப்மேரி,மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இன ஒற்றுமையினை வெளிப்படுத்தும் வகையிலான சிறப்புரைகளும் நடைபெற்றன.


35 minute ago
47 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
54 minute ago