2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புலவர் சிவசேகரம் அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தண்டாயுதபாணி தலைமையுரையையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் சிறப்பரையையும் வாழ்நாள் பேராசிரியர் சி. மௌனகுரு தமிழ் பண்பாடு பற்றி விசேட உரையையும் நிகழ்த்தினர்.

மேலும்,மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, கிழக்கில் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நினைவுச் சின்னமும் 2014இல் வெளிவந்த சிறந்த நூல் தெரிவில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .